Islamic Widget

February 12, 2014

மசூதியில் காவல்துறை தாக்குதல்: இருவர் பலி!

நெய்ரோபி: மசூதி மீது காவல்துறை தாக்குதல்: இருவர் பலி!கென்யாவிலுள்ள மஸ்ஜிதுல் மூசா என்ற முஸ்லிம்களின் முக்கிய மசூதியில் காவல்துறை நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். பலருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கென்யா நாட்டில் தீவிர போக்கு கொண்ட கிறிஸ்தவ பிரிவினரின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு முஸ்லிம்கள் மிகச் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். அங்குள்ள போர்ட் சிட்டி என்ற இடத்தில் மஸ்ஜிதுல் மூசா என்ற பெயரிலான மசூதி ஒன்று உள்ளது. இப்பகுதியிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் இங்கு ஒன்று கூடி பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த ஞாயிறன்று திடீரென காவல்துறையினர் உட்புகுந்து சோதனை நடத்தியுள்ளனர். பிரார்த்தனை வேளையின் போது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சோதனை என்ற பெயரில் மசூதியினுள் காவல்துறையினர் நுழைந்ததை எதிர்த்து முஸ்லிம்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களைப் பிரித்துவிட கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. எனினும், அவர்கள் கலைந்து செல்லாததைத் தொடர்ந்து காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் தொடுத்துள்ளது.
இத்தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். சுமார் 350 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று மசூதி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சிதறி கிடந்தனர். சோதனைக்குப் பின்னர் 150 க்கு மேற்பட்ட முஸ்லிம்களைக் கைது செய்ததாக காவல்துறை அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகளும் பெண்களும் ஆவர்.
இக்கொடூர சம்பவம் தொடர்பாக கென்ய காவல்துறை, "மூசா மசூதியில் சோமாலியாவிலுள்ள அல் ஷபாப் என்ற ஜிஹாதிய குழுவுக்கு இளைஞர்களைத் தேர்வு செய்வதாகவும் தீவிரவாத பயிற்சிகள் நடப்பதாகவும் வந்த தகவலைத் தொடர்ந்து சோதனை நடத்தினோம். இம்மசூதியில் நடக்கும் பிரார்த்தனை வேளை கூட்டங்களின் போது கென்ய அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யவேண்டுமென மக்களைத் தூண்டுவதாகவும் உளவுத்தகவல் எங்களுக்குக் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்தே இச்சோதனை நடத்தப்பட்டது. ஆனால், காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் காவல்துறை அதிகாரிகள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதால் எதிர் தாக்குதல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதில் இரு காவலர்கள் கடுமையாக காயமடைந்துள்ளனர். மசூதியின் உள்ளே ஒரு டாய்லட்டில் காவலர் ஒருவர் இரத்தம் கொட்டிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக 150 பேரைக் கைது செய்துள்ளோம். இச்சோதனையின் போது டிவிடிகள், பேனர்கள், துண்டறிக்கைகள் போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளது.
மசூதியினுள் புகுந்து கென்ய காவல்துறை நடத்தியுள்ள இத்தாக்குதல் சர்வதேச சமூகத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
தானிஷ், சவூதி

No comments:

Post a Comment