Islamic Widget

January 30, 2013

முஸ்லிம்களின் உணர்வுகள் குறித்து கவலையில்லை! விஸ்வரூபத்திற்கு தடை நீக்கம் – சென்னை உயர்நீதிமன்றத்தின் பாரபட்சமான தீர்ப்பு!


vishwaroopamசென்னை:திருக்குர்ஆனையும், தொழுகை உள்ளிட்ட முஸ்லிம்களின் வழிபாட்டையும் இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கான தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.
தமிழ் இன உணர்வுக்காக டேம் 999 என்ற திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதி மறுத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் முஸ்லிம்களின் உணர்வுகள் குறித்து கவலைப்படாமல் சென்னை உயர்நீதிமன்றம் விஸ்வரூபம் படத்திற்கான தடையை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முற்போக்கு பிராமணனான கமலஹாசன் இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் விஸ்வரூபம். இத்திரைப்படம் அமெரிக்கா தீவிரவாதத்திற்கு எதிரான போர் என நடத்தி வரும் ஆக்கிரமிப்பு போரை ஆதரிக்கும் வகையிலும், உலக மக்களுக்கு நல்லுபதேசமாக அருளப்பட்ட புனித திருக்குர்ஆனையும், தொழுகை உள்ளிட்ட வணக்க வழிபாடுகளையும் இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு இரண்டு வார கால தடையை விதித்தது. பல்வேறு நாடுகளிலும் இந்தியாவின் சில பகுதிகளிலும் இத்திரைப்படம் திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் தடை உத்தரவை எதிர்த்து கமலஹாசன் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தது.
நீதிபதி கே வெங்கட்ராமன் பலமணிநேர விசாரணைக்குப் பிறகு செவ்வாய் இரவு 10 மணி அளவில் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில், தமிழக அரசு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி குற்றவியல் சட்டம் பிரிவு 144ன் கீழ் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு விதித்திருந்த இருவாரத் தடையாணையை நிறுத்திவைத்து உத்திரவிட்டார். ஆயினும் வழக்கு விசாரணை தொடருமென்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு சென்னை உயர்நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்யவுள்ளது.

No comments:

Post a Comment