Islamic Widget

January 18, 2013

ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் முகாம்களை கண்டுபிடிக்க காடுகளில் என்.ஐ.ஏ தேடுதல் வேட்டை!


NIA team scans Dewas forests for saffron hideoutsபுதுடெல்லி:ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் ரகசிய முகாம்களை கண்டுபிடிக்க மத்தியபிரதேச மாநிலத்தின் தேவாஸில் உள்ள காட்டுப்பகுதிகளில் தேசிய புலனாய்வு ஏஜன்சி தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெடிக்குண்டு தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பு இங்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் சோதனை நடத்தியிருந்தனர். இதுத்தொடர்பான ஆதாரங்கள் மற்றும் ரகசிய முகாம்களை கண்டுபிடிக்க என்.ஐ.ஏ சோதனை நடத்திவருகிறது.
வெடிக்குண்டு தாக்குதல்களுக்கு சூத்திரதாரியாக திகழ்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியின் கொலை மற்றும் மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு ஆகியவற்றில் தொடர்புடைய பல்பீர்சிங்கையும் என்.ஐ.ஏ இந்த தேடுதல் வேட்டைக்கு அழைத்துவந்தது.
குராதியா ராவு காட்டுப் பகுதியில் இந்த சோதனை நடந்தது. தேவாஸின் தலைநகரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள மோ காட்டுப் பகுதியில் இன்னொரு என்.ஐ.ஏ குழுவினர் சோதனை நடத்தினர். ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் ரகசிய புகலிடமாக திகழும் தீபால்பூரில் இருந்து முன்னர் கைதுச் செய்யப்பட்ட கமால் சவுகான் என்ற ஹிந்துத்துவா தீவிரவாதியை அழைத்து வந்தும் இங்கு சோதனை நடத்தப்பட்டது.
இந்தூரில் மண்டல்வாடா கிராமத்தில் இருந்து கடந்த திங்கள் கிழமை பல்பீர் சிங் கைது செய்யப்பட்டான். ஜோஷியின் நெருங்கிய நண்பனும், கொலையில் குற்றவாளிகளில் ஒருவனுமான ஜிதேஷ் பட்டேலின் வீட்டிலும் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது. பல்பீர் சிங்கின் வீட்டில் இருந்து 9 எம்.எம் பிஸ்டலின் தோட்டக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் மீதமுள்ள தோட்டக்களை உபயோகித்து ஜோஷி கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
2007 டிசம்பர் 29-ஆம் தேதி பைக்கில் சென்றுகொண்டிருந்த ஜோஷி 9 எம்.எம் பிஸ்டலின் தோட்டா பாய்ந்து மரணமடைந்தான். மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் குற்றவாளியான தேஜ்ராம் பவார் உள்ளிட்ட இப்பகுதியில் முக்கிய ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் வீடுகளிலும் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது. இப்பகுதியில் சோதனைகள் தொடரும் என்று என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தீவிரவாத செயல்களின் ரகசியம் கசிந்ததும், மதுபான விற்பனையில் ஏற்பட்ட தகராறும் ஜோஷியின் கொலைக்கு காரணம் என்று பல்பீர்சிங் என்.ஐ.ஏவிடம் ஒப்புக்கொண்டுள்ளான்.
இதனிடையே, சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மலேகான் குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதியையும் தேசிய புலனாய்வு ஏஜன்சி கைது செய்துள்ளது.இந்தூரில் ஸான்வர் பகுதியைச் சார்ந்த தினேஷ் தேவ்ரா என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். இவனிடம் விசாரணை தொடருகிறது. நேற்று முன் தினம் இந்த இரண்டு குண்டுவெடிப்புகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி கொலைத் தொடர்பாக பல்பீர் சிங் என்ற ஹிந்துத்துவா தீவிரவாதியை என்.ஐ.ஏ கைது செய்திருந்தது.

No comments:

Post a Comment