Islamic Widget

January 16, 2013

ஜனவரி 20 மற்றும் பிப்ரவரி 24ம் தேதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம்

கடலூர்:போலியோ சொட்டு மருந்து முகாமிற்கான அனைத்துத் துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.நாடு முழுவதும் வரும் ஜனவரி 20 மற்றும் பிப்ரவரி 24ம் தேதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. அந்த பணியை கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக செய்திடும் பொருட்டு அனைத்துத் துறை அலுவலர்களின் ஒருங்கிணைப் புக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு
தலைமை தாங்கிய கலெக்டர் கிர்லோஷ்குமார் பேசுகையில், போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணி கடந்த 95ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன காரணமாக கடந்த 2004ம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தில் இளம்பிள்ளை வாத நோய் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் நடவடிக்கையால் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் நமது நாட்டில் இளம்பிள்ளை வாத நோய் ஒழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் சான்றிதழ் பெற வாய்ப்பு அமையும். இதற்கு அனைத்துத் துறை அலுவலர்களின் ஒத்துழைப்பு அவசியம். போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பிற துறை வாகனங்களையும், ஊழியர்களையும் உரிய நேரத்தில் விடுவிக்க வேண்டும்.அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் முகாம் நடைபெறும் நாள் மட்டுமல்லாது, அடுத்தடுத்த நாட்களில் வீடு, வீடாக சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க வேண்டும். சொட்டு மருந்தினை குறிப்பிட்ட குளிர்ச்சியில் வைத்திருக்க முகாம் நடைபெறுவதற்கு முதல் நாள் முதல் மூன்று நாட்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். மேலும், நடைபெறவுள்ள போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்து போதிய விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.கூட்டத்தில் சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, வருவாய், கல்வி, உள் ளாட்சி, ஊட்டச்சத்து, சமூக நலம், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment