Islamic Widget

June 26, 2012

முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுதலை செய்யகோரி பெண்கள் அமைப்பினர்​(NWF) பேரணி மற்றும் ஆர்ப்பாட்ட​​ம்

சென்னை: 7 வருடத்திற்கு மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரி நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் பெண்கள் அமைப்பினர் சென்னை, மதுரை, கோவை மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் நேற்று(ஜுன் 24) பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.கடந்த ஆட்சியில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விஷயத்தில் அரசு அதிகாரிகளின் ஒருசார்பு தன்மை, உளவுத்துறை அதிகாரிகளின் முஸ்லிம் விரோதப்போக்கு, கருணையில் கூட
அரசின் அப்பட்டமான பாரபட்சம் ஆகியவற்றால் முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கை தகர்க்கப்பட்டு விட்டது. மேலும், விசாரணை சிறைவாசிகளாக இருந்தபோது ஜாமீன் கூட மறுக்கப்பட்டு நீண்ட நெடும் சிறைவாசத்தை அப்போதே தண்டனையாக அனுபவித்து விட்டு அவர்கள் தண்டனைக் கைதிகளாக இப்போதும் சிறையில் வாடி வருகின்றனர்.

பல்வேறு வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 200க்கு மேற்பட்டவர்களில் ஒருவர் கூட மதரீதியாக குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்கோ, தண்டனைகளோ சுமத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொது மன்னிப்பில் சிறைக்கைதிகளை விடுதலை செய்வது என்பது தற்போதைய அ.தி.மு.க.அரசின் கொள்கைக்கு விரோதமானதல்ல. அரசின் பொது மன்னிப்பு என்பது முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு மட்டுமல்லாது மற்ற சிறைவாசிகளுக்கும் கிடைத்திட வேண்டும். ஆகவே விடுதலைக்குத் தகுதியுள்ள அனைத்து சமூகங்களை சேர்ந்த ஆயுள் சிறைவாசிகளையும் கருணை அடிப்படையில் பொது மன்னிப்பில் விடுதலை செய்திட வேண்டும் எனவும், முஸ்லிம் சிறைவாசிகளின் அவலம் நீங்கிட வேண்டுமெனில் அரசு வழங்கிடும் விடுதலை ஒன்றே தீர்வு என்ற நிலையில் 7 ஆண்டுகள்கழிந்த 49 முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை வருகின்ற செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கருணை அடிப்படையில் பொதுமன்னிப்பில் விடுதலை செய்திடுமாறும் பாதிக்கப்பட்ட பெண் சமூகத்தின் சார்பாக நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) இந்த மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

நெல்லை
நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் V.S.T.பள்ளிவாசலில் இருந்து தொடங்கிய பேரணி ஆஸாத் வீதி வழியாக பஜார் திடலில் நிறைவடைந்தது. பின்னர் சிறைவாசிகளின் விடுதலைக்கான கோரிக்கை ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.



பேரணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் A.கைசர் அவர்கள் துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டதிற்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் N.ஜன்னத் ஆலிமாதலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் நெல்லை மாவட்டதலைவர் M. மும்தாஜ் ஆலிமா வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் S.பாத்திமா கனி, தூய சவேரியர் கல்லூரியின் உதவி பேராசிரியர் P.சாந்திஆகியோர் கோரிக்கையுரையற்றினார்.
இறுதியாக நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் நெல்லை மாவட்ட செயலாளர் நஸ்ரத் நன்றியுரையற்றினார்.

இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர்கள், முஸ்லிம் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சென்னை
சென்னையில் இப்பேரணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் எம். முஹம்மது இஸ்லாம்யில் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவி நஃபீஸா பானு சிறப்புரை நிகழ்த்தினார். ஏராளமான பெண்கள் இதில் கலந்து கொண்டு கோரிக்கை கோஷங்களை எழுப்பினர்.
மாலை 4 மணிக்கு எழும்பூர் இராஜரத்தினம் மைதானத்திலிருந்து துவங்க இருந்த இப்பேரணி காவல்துறையினரின் கிறுபிடியால் அரை மணி நேரம் தாமதமாக துவங்கப்பட்டது. இப்பேரணிக்காக நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் நிர்வாகிகள் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று இராஜரத்தினம் மைதானத்திலிருந்து காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி வரை பேரணி நடத்த அனுமதி கோரினர். இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் காவல்துறை அதிகாரிகள் கடைசி நிமிடத்தில் இவ்வழியாக பேரணி நடைபெறுவதற்கு அனுமதி வழங்க முடியாது என தடுத்தனர்.
உயர் அதிகாரிகள் ஏற்கனவே வாய்மொழியாக அனுமதி வழங்கிவிட்டார் என எடுத்துக்கூறியும் அப்பகுதி உதவி ஆணையர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் காவல்துறையினருக்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக நிர்வாகிகள் தாங்கள் கைது செய்யப்பட்டாலும் பராவாயில்லை திட்டமிட்டபடியே பேரணியை நடத்துவோம் என்று உறுதியாக இருந்த பின்னர் காவல்துறையினர் அனுமதி வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பா. புகழேந்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மதுரை
மதுரையில் மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினருமான முஹம்மது யூசுஃப் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இப்பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
கோவை
கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநிலத் தலைவர் A.S இஸ்மாயில் அவர்கள் உரை நிகழ்த்தி பேரணியை துவங்கி வைத்தார்.
NWF-ன் மாநில தலைவர் பாத்திமா ஆலிமா அவர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான பெண்கள் செஞ்சிலுவை சங்கம் நோக்கி பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத் திடலை அடைந்தனர்.
ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு NWF-ன் மாவட்டத் தலைவர் M .பெனாசிர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் M.ஹபீப் நிஷா தலைமையுரையாற்றினார்.
NCHRO மாநிலத் தலைவர் பவானி பா. மோகன் மற்றும் NWF-ன் மாநில தலைவர் பாத்திமா ஆலிமா ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். மாவட்ட செயலாளர் ஷர்மிளா நன்றியுரையாற்றினார்.

No comments:

Post a Comment