Islamic Widget

March 30, 2012

தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் புதிய மின் கட்டணம் அறிவிப்பு

மின்சார கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு மின்சார வாரி யம் ஒழுங்குமுறை ஆணணயத்திடம் முறை யிட்டது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் குறிப் பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மின்சார கட்டணத்தை உயர்த்தாத தால் மின் வாரியம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக ஆ ணையத்திடம் எடுத்து கூறியது. அதனால் எந் தெந்த பிரிவினரு க்கு எவ்வளவு கட்டணம் உயர்த் தலாம் என முடிவு செய்து மின் சார வாரியம் ஒழுங்கு முறை ஆணை யத்திடம் கடந்த நவம்பர் சமர்ப்பித்தது.
அதைத்தொடர்ந்து ஆணையம் பொதுமக்களிடம் கருத்து கேட்டது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் மின்கட்டணம் உயர்த்தப் படுவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். இதை யடுத்து மின்சார கட்டணத்தை எவ்வளவு உயர்த்தலாம், வீடுகள், தொழிற் சாலைகள், உயர் அழுத்த மின்சார பயன்பாடு, கட்டணம் எவ்வளவு அதிகரிக்கலாம் என்று முடிவு செய்யப் பட்டுள்ளது. சிறு தொழில்கள், குடிசை தொழில்களுக்கு கட்டண உயர்வு எப்படி அமல்படுத்து வது குறித்து இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மின் கட்டண உயர்வுக்கான அறிவிப்பை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது. அதன்படி,100 யூனிட் வரை மின்சாரம் உபயோகப் படுத்து பவர்களுக்கு 25 பைசா அதிகரித்து 1 ரூபாய் 10 பைசாவாக நிர்ணயித்துள்ளது. 100 யூனிட் முதல் 200 யூனிட் வரை உபயோகப் படுத்துப வர்களுக்கு 1 ரூபாய் 80 பைசாவாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 4 ரூபாயிலிருந்து 5 ரூபாய் 50 பைசாவாகவும் உயர்த்தியுள்ளது.

No comments:

Post a Comment