Islamic Widget

February 01, 2012

எம்.கே.கலிக்குஜ் ஜமான் MYPNOவிற்கு அனுப்பிய கடிதம்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

01-02-2012

பொருள்: தேர்தல் தவிர்க்கப்பட்டது என்ற S.M முஹம்மது யூனுஸ் அவர்களின் அறிவிப்பு MYPNO வில் வெளிவந்தது பற்றி.

அஸ்ஸலாமு அ லைக்கும் வரஹ்

அன்பிற்கினிய பரங்கிப்பேட்டை சகோதரர்களே, கலிகுஜ்ஜமான் எழுதிக்கொள்வது.இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் 2012 தேர்தல் பற்றி உங்கள் வெப்சைட்டில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தீர்கள். நான் எனது வேட்புமனுவை வாபஸ் பெறுவேன் என்று எதிர்பார்ப்பதாகவும் டாக்டர்.நூர்முஹம்மது ஜமாஅத் தலைவராகிறார் என்றும் செய்தி வெளிவந்தது.
ஒரு வேட்பாளர் என்ற முறையில் நீங்கள் என்னிடம் எந்த விளக்கமும் கோரவில்லை என்பதை ஒரு புறம் வைத்து விடுகிறேன்.தொடர்ந்து முஹம்மது யூனுஸ் அவர்களுடைய ஒரு அறிவிப்புச் செய்தியும் வெளிவந்தது உங்கள் வெப்சைட்டில். அதற்கு விளக்கமளிக்கும் கட மை ஒரு வேட்பாளர் என்ற முறையில் எனக்குள்ளது. அவ ர் தனது விளக்கத்தில் ்நான் அவ்வாறு சொன்னது போலவே ஊரின் ஒற்றுமையை கருதி ஜனாப் பி.ஹமீது கவுஸ் அவர்கள் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார். இதன் மூலமாக தேர்தல் தவிர்க்கப்படுவதுடன், பணவிரயமும் தேவையற்ற பரபரப்பும் இல்லாமல் போய்விட்டது.் என்று குறிப்பிட்டுள்ளார். வேட்பாளராக நான் வேட்புமனு தாக்கல் செய்து அது வாபஸ் பெறப்படாத நிலையில் "தேர்தல் தவிர்க்கப்பட்டு விட்டது" என்று முடிவெடுப்பதில் ஏதாவது நியாயமுள்ளதா?இந்தத் தேர்தல் தேவையா இல்லையா என்று முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு என்னிடமுள்ளது. நான் வேட்புமனுவை வாபஸ் பெற்றால் மட்டுமே தேர்தல் இல்லை என்றாகும். நான் எனது மனுவை வாபஸ் பெறாவிட்டால் இந்த தேர்தல் நடக்கத்தான் செய்யும். இந்த சாதாரண ஜனநாயக மரபைக் கூட மீறி தேர்தல் தவிர்க்கப்பட்டது என்று முஹம்மது யூனுஸ் அவர்கள் அறிவித்துள்ளதை ஒரு வேட்பாளர் என்ற முறையில் நான் ஆட்சேபிக்கிறேன்.‘ஊரின் ஒற்றுமையைக் கருதி நான் சொன்னது போல ஹமீது கவுஸ் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார் என்று முஹம்மது யூனுஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்’. 31.01-2012 மதியம் 3 மணிவரை ஹமீது கவுஸ் வேட்புமனு தாக்கல் செய்வார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கத்தான் செய்தது. அந்த எதிர்பார்ப்பில் தான் தேர்தல் அலுவலர்களும் அலுவலகத்தை திறந்து உட்கார்ந்திருந்தார்கள். ஹமீது கவுஸ் தேர்தலில் போட்டியிடவில்லை என்று முன்பே அறிவித்திருந்தால் இந்த எதிர்பார்ப்பு வந்திருக்காது. இப்போது இப்படி ஒரு அறிவிப்பை முன்னாள் ஜமாஅத் தலைவர் செய்தியாக வெளியிடலாமா?தேர்தல் நடந்தால் ஊரின் ஐக்கியம் கெட்டுப் போகும் என்ற தோரணையில் முஹம்மது யூனுஸ் அவர்கள் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இரண்டு வேட்பாளர்கள் இருந்தால் ஊர் இரண்டு பட்டு விடும் என்றால் மூன்று வேட்பாளர்கள் இருந்தால் ஊர் மூன்றாக பிரிந்து விடுமா? தேர்தல் முறையை கொண்டு வந்த முஹம்மது யூனுஸ் அவர்கள் இவ்வாறு கருத்தை வெளியிடலாமா என்பதை சிந்திக்கட்டும்.முஹம்மது யூனுஸ் அவர்களின் சில கருத்துக்களுக்கு மறுப்பளிக்கும் அதே வேளையில் எனது வேட்புமனுவை வாபஸ் பெற்று மதிப்பிற்குரிய டாக்டர்.நூர் முஹம்மது அவர்கள் ஜமாஅத் தலைவராவதற்கு வழி விடுகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

(எனது இந்த கடிதத்தை mypnoவில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்).

இவண்
கலிகுஜ் ஜமான்
ராயல் தெரு
பரங்கிப்பேட்டை..

3 comments:

  1. Salaam to Mr.Khaliq uz Zaman,

    Alhamdulillah..your points and the method of expression is very good and appriciated.
    every candidate has the full authority and rights to say these words.
    May Almighty shower blessings on you.

    ReplyDelete
  2. Mr.Sultan

    Khaliq uz Zaman has no rights to say these words, Because he is not right candidate he is a dummy, Doctor inform election officers he is dummy candidate behalf of me, so how can you say he is a candidate,

    ReplyDelete