Islamic Widget

October 30, 2011

மாவட்டத்தில் நீடிக்கிறது தொடர் மழை பரங்கிப்பேட்டையில் 29 மி.மீ.,




கடலூர் : கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வடகிழக்குப் பருவ மழை துவங்கி கடந்த 5 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடற்கரை பகுதியான கடலூர், சிதம்பரம் பகுதியில் அதிகளவில் மழை பெய்து வருகிறது..


நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் பெய்த மழையளவு வருமாறு: சிதம்பரம் 37மி.மீ., கடலூர் 46.40, பரங்கிப்பேட்டை 29, காட்டுமன்னார்கோவில் 33.30, தொழுதூர் 35.60, ஸ்ரீமுஷ்ணம் 28, விருத்தாசலம் 7.30, பண்ருட்டி 6.40, கொத்தவாச்சேரி 20, கீழ்ச்செருவாய் 5,அண்ணாமலைநகர் 63, சேத்தியாதோப்பு 18.50, புவனகிரி 36, லால்பேட்டை 43, காட்டுமயிலூர் 14, வேப்பூர் 10, குப்பநத்தம் 8, லக்கூர் 12.30, பெலாந்துரை 4.40மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அண்ணாமலை நகரில் 63 மி.மீ.,மழை பெய்துள்ளது. தினந்தோறும் மழைபெய்து வருவதால் கெடிலம் மற்றும் பெண்ணை ஆறுகளில் மழைநீர் வடிந்து வருவதால் தண்ணீர் சீராக ஓடிக் கொண்டிருகிறது. தொடர் மழை காரணமாக வாலாஜா, பெருமாள், வெலிங்டன் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

No comments:

Post a Comment