Islamic Widget

September 07, 2011

பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய பள்ளி ஆசிரியர் கைது!

கடலூர் : சான்றிதழ் பெற்று தருவதாக கூறி பத்தாம் வகுப்பு மாணவியை திருச்சிக்கு கடத்தி சென்ற பள்ளி ஆசிரியர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கொளஞ்சி. (வயது 48). இவர் ஆசிரியராக பணிபுரியும் அதே பள்ளியில் சங்கீதா என்ற மாணவி 10ஆம் வகுப்பு படிக்கிறார். சங்கீதா கல்வி உதவித் தொகை பெறுவதற்காக அவருக்கு ஜாதி சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் தேவைப்பட்டது. இதுதொடர்பாக தான், ஏற்கனவே படித்த வேப்பூர் பள்ளியில் ஜாதி சான்றிதழ் வாங்க வேண்டும் என்று ஆசிரியரிடம் கூறியுள்ளார்.

இதற்கு தான் வாங்கிதருவதாக கூறிய ஆசிரியர் திங்கள்கிழமையன்று மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் ஒரு டாடா சுமோ காரில், மாணவி சங்கீதாவை அழைத்தபோது. மாணவி தயங்கியதும், இது என்னுடைய கார் தான் சீக்கிரம் போய் திரும்பி விடலாம் என்று கூறி அழைத்து சென்றார். ஆனால் கார் வேப்பூரில் நிற்காமல் திருச்சி நோக்கி சென்றதும், மாணவி கத்தியுள்ளார். ஆனால் ஆசிரியர் பலவந்தப்படுத்தி காரில் அழைத்துச் சென்றுள்ளார். அடுத்த நாள் திருச்சியில் இருந்து தப்பித்து வேப்பூர் வந்த, மாணவி, வேப்பூரில் இருந்து நல்லூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு பெற்றோர்களிடம் நடந்தவைகளை கூறியுள்ளார் மாணவி.

மாணவியின் பெற்றோர் வேப்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் திட்டக்குடி டிஎஸ்பி வனிதா இந்த புகாரின் பேரில் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி காவல்துறையினர் ஆசிரியர் கொளஞ்சியை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் கொளஞ்சி பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வது தங்களுக்கு நீண்ட நாட்களாக தெரியும் என்று அப்பள்ளியின் மாணவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஆசிரியர் கொளஞ்சியை கண்டித்தும், பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் ஆசிரியர் கொளஞ்சியின் இரு சக்கர வாகனத்தை தீ வைத்து எரித்தனர். இந்நிலையில் ஆசிரியர் கொளஞ்சி தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment