Islamic Widget

June 14, 2011

ஓட்டுனர் உரிமம் பெற இருப்பிட சான்றுக்கு குடும்ப அட்டையை ஏற்றுக்கொள்ள கோரிக்கை

சிதம்பரம்: ஓட்டுநர் உரிமம் பெற இருப்பிட சான்றுக்கு குடும்ப அட்டையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என போக்குவரத்துத் துறை ஆணையருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் குழுமச் செயலர் அப்பாவு, போக்குவரத்து துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள குடும்ப அட்டை குடும்பத்தில் மிக முக்கியமான ஒரு அங்கம். குடும்ப அட்டையை அடையாள அட்டையாக பல அரசு துறை பயன்பாட்டிற்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
 ஆனால் போக்குவரத்துத் துறையில் ஓட்டுனர் உரிமம் பெற இருப்பிட சான்றுக்கு குடும்ப அட்டை நிராகரிக்கப்படுகிறது. தேர்தல் அடையாள அட்டை, பாஸ்போர்ட், எல்.ஐ.சி., பாண்டு ஆகிவயற்றில் ஒன்றை கேட்கின்றனர். இவைகள் இல்லையென்றால் நோட்டரி பப்ளிக் சான்று பெற வேண்டும். போக்குவரத்துத் துறை கேட்கும் ஆவணங்கள் ஓட்டுனர் உரிமம் பெறும் அனைவரும் வைத்திருக்க இயலாது. நோட்டரிக் பப்ளிக் சான்று, வட்டார போக்குவரத்து அலுவலரிடம் கையெப்பம் ஆகியன பெற்றுவர வேண்டியிருப்பதால் கால விரயம், பண விரயம் ஏற்படுகிறது. எனவே அரசு கோபுர சின்னத்துடன் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட குடும்ப அட்டையை போக்குவரத்துத்துறை மட்டும் புறக்கணிப்பது நியாயமில்லை. எனவே ஓட்டுனர் உரிமம் பெற இருப்பிட முகவரி சான்றுக்காக குடும்ப அட்டையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment