Islamic Widget

April 04, 2011

கடலூர் குட்டி குஜராத்தாக மாறும்! பாஜக

கடலூர்: பல்வேறு அதிரடி திட்டங்களின் மூலம் கடலூரை குட்டி குஜராத்தாக மாற்றும் திட்டம் இருப்பதாக பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என கடலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடப் போகும் பா.ஜ.க வேட்பாளர் குணசேகரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியபோது கடலூர் நகரத்தின் மையப்பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த துறைமுகத்தை ஆழப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.
மேலும் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க கடற்கரையோரமாக புன்னைமரங்கள் வளர்க்கப்படும். மேலும், கடலரிப்பை தடுக்கும் வகையில் கருங்கற்களும் கொட்டப்படும். கடந்த நான்கு ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ள பாதாள சாக்கடை திட்டம் விரைந்து முடிக்கப்படும். சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுபடுதலை கண்காணித்து கட்டுப்படுத்தப்படும். சாலை விதிகளை நெறிப்படுத்தி விபத்தில்லா நகரமாக மாற்றுவேன்.கடலூர் ஆல்பேட்டையில் இருந்து அன்னவல்லி வரை பைபாஸ் சாலை அமைக்க பாடுபடுவேன். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஆலோசனைப்படி கடலூர் தொகுதியில் தடையில்லா மின்சாரம், குடிநீர், சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட வசதியை ஏற்படுத்தி கடலூர் தொகுதியை குட்டி குஜராத் ஆக மாற்றுவேன். தமிழக அரசு கொண்டு வந்துள்ள மருத்துவக்கல்லூரியை அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் கல்லூரிக்கு இணையாக தரம் உயர்த்தப்படும்.கடலூர் மக்களின் முக்கிய பிரச்ச்னையான குடிநீர் பற்றாக்குறையை போக்க தொழில்நுட்பத்துடன் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பா.ஜ.கட்சி வேட்பாளர் குணசேகரன் கூறியுள்ளார்.

3 comments:

  1. கடலூரை குட்டி குஜராத்தாக மாற்ற வேண்டாம் இங்கு அனைத்து மக்களும் ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்துவருகிறார்கள். இதை மனிதவேட்டையாடிய "மோடி"யின் குஜராத்தாக மாற்றவேண்டாம்.

    ReplyDelete
  2. ஒரு தாய் மக்களாய் வாழ்வது குணசேகரன் இக்கு பிடிக்கவில்லையா உங்கள் அரசியல் சுயநலத்துக்காக இந்த மாவட்டத்தை மேலும் அந்த மனித இன துரோகி குஜராத்தை ஆக்கியதுபோல் ஆக்கவேண்டாம் ஐய்யா ஏற்கனவே இந்த மாவட்டம் உலகத்தில் வாழத் தகுதியற்ற மாவட்டமாக உள்ளது வேண்டாம் ஐய்யா உங்கள் குஜராத் கனவு .....

    அமைதியாக எங்களை வாழவிடுங்கள் ......

    ReplyDelete
  3. ஒரு மயிர் இல்லே பா.ஜ.க-க்கு ஒரு தொகுதியிலே கூட டிபாசிட் வாங்காது!!!

    தினமலர் ஒரு பார்பான் பத்திரிக்கை அவன் இப்படிதான் நியூஸ் போடுவான்...

    அதையும் நீங்கள் கட் காஃபி பேஸ்ட் செய்றிக்கே நீங்கள்????

    பி.ஜே.பி பற்றி செய்தி போடுவதை நிறுத்திகொள்ளுங்கள்...

    ReplyDelete