Islamic Widget

April 28, 2011

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு ஆசாமி கைது: 15 சவரன் நகை மீட்பு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 2.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர். நெல்லிக்குப்பம் சின்னத் தெருவைச் சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி. வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாஹிரா பானு. இவர் தனது வீடு பாதுகாப்பாக இல்லாததால் மாருதி நகரில் உள்ள தனது அண்ணன் சாதிக் வீட்டில் 20 சவரன் நகையை கொடுத்து வைத்திருந்தார்.
கடந்த வாரம் சாதிக் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தபோது மர்ம ஆசாமி வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகளை திருடிச் சென்றார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் காராமணிக்குப்பம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர் கடலூர் வில்வநகரைச் சேர்ந்த விமலாதித்தன் (39) எனவும், பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர், நெல்லிக்குப்பம் மாருதி நகரில் திருடிய நகையை பண்ருட்டி அடகு கடையில் வைத்து பணம் வாங்கியதை ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து விமலாதித்தனை கைது செய்து, பண்ருட்டி அடகு கடையில் இருந்து 2.50 லட்சம் மதிப்புள்ள 15 பவுன் நகையை கைப்பற்றினர்.

No comments:

Post a Comment