Islamic Widget

March 19, 2011

திமுக. தேர்தல் அறிக்கை வந்தது : மிக்சியும் கிரைண்டரும் இலவசம்

தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் ஆளுங்கட்சி தி.மு.க. முந்திக்கொண்டுள்ளது.இன்று மாலை தி மு க வின் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்

அதன் விவரம் வருமாறு:-

*1 கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல் படுத்தப்படும்.


*ரேஷன் கார்டுகளுக்கு மானிய விலையில் அயோடின் கலந்து உப்பு. * குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னூரிமை வழங்கப்படும். *வீடுதோறும் பெண்களுக்கு இலவசமாக கிரைண்டர் வழங்கப்படும். ஏற்கனவே கிரைண்டர் உள்ள வீடுகளுக்கு இலவசமாக மிக்ஸி வழங்கப்படும். *பரம ஏழைகளுக்கு மாதம் தோறும் இலவசமாக 35 கிலோ அரிசி வழங்கப்படும். *அரசு பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுமுறை மூன்று மாதத்திலிருந்து 4 மாதம் ஆக உயர்தப்படும். * சாலை விபத்தில் பாதிக்கப்பட்டால் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை.

*அரசு கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிடர் மாணவர்களுக்கு லேப்டாப் *அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையம்

*எல்லா மாவடட்டங்களுக்கும் அரசு செவிலியர் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்படும். *60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லை. *முதியோர் உதவித்தொகை ரூ 450 லிருந்து ரூ.750 ஆக உயர்த்தப்படும். * கோவை மதுரை நகரில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல் படுத்தப்படம். *விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்கப்படுவது தடுக்கப்படும்.

*சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை அதிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும்

*மீனவர்களுக்கு நிதி தர புது காப்பீடு திட்டம் செயல் படுத்தப்படும்.

*திருச்சி,மதுரையில் மனநல மருத்துவமனை அமைக்கப்படும். *உழவர் சந்தை போன்று நகர்ப்புறங்களில் நுகர்வோர் சந்தை அழைக்கப்படும். *அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் மூன்று சீருடை வழங்கப்படும்.

*சென்னை தாம்பரம் காசநோய் மருத்துவமனை போல் மதுரையில் காசநோய் மருத்துவமனை அமைக்கப்படும்.

*மகளிர் சுய உதவிகளுக்கு தரப்படும் கடன் ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும்.

*நெல் கரும்பு உள்ளிட்டவற்றிற்கு நியாய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* மாவட்ட மருத்துவமனைகளில் உயிர்காக்கும் உயிர் சிகிச்சை அமைக்க நடவடிக்கை

*மாதம் ஒரு நாள் அரசு மருத்துவர்கள் வீடு தேடி சென்று முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். *தரமான கல்வி பெற 2006 முதல் 2009 வரை பெறப்பட்ட கல்விக்கடனை அரசு செலுத்தும்.

*சாயக்கழிவுகளை இயற்கை முறையில் ஆவியாக்க நடவடிக்கை

*பொங்கல் தோறும் கிராமங்களில் அரசு சார்பாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் *திருநங்கைகளுக்கு சுய உதவிக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். *தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும். *சொட்டு நீர் பாசனம் செய்ய விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும்.

*சென்னையிலிருந்து கோவைக்கு புல்லட் ரெயில் அமைக்க நடவடிக்கை.

*தரமான கல்வி வழங்க அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்.

No comments:

Post a Comment