Islamic Widget

March 26, 2011

புவனகிரி தொகுதியில் அ.தி.மு.க., நிர்வாகி சுயேச்சையாக மனு தாக்கல்

கடலூர் : தே.மு.தி.க.,- வி.சி., நிர்வாகிகள் முன்னிலையில் அ.தி.மு.க., நிர்வாகி புவனகிரி தொகுதிக்கு சுயேச்சையாக மனுதாக்கல் செய்தார். கடலூர் மாவட்டம், புவனகிரி சட்டசபை தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம் மீண்டும் இதே தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் புவனகிரி அடுத்த பு.உடையூர் கிராம அ.தி.மு.க., கிளைச் செயலர் ராஜாமான்சிங் (27) புவனகிரி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக தேர்தல் அலுவலர் மாவட்ட வழங்கல் அலுவலர் கல்யாணத்திடம் நேற்று மனு தாக்கல் செய்தார்.
அவரை பு.உடையூர் ஊராட்சி தலைவர் மகாதேவன், அதே கிராமத்தைச் சேர்ந்த தே.மு.தி.க., கிளைச் செயலர் கஜேந்திரன், பொருளாளர் அருள்தாஸ், வி.சி., கிளைச் செயலர் பழனிவேல், சீயாபாடி கிளை அ.தி.மு.க., செயலர் சங்கர் ஆகியோர் முன் மொழிந்தனர்.


மனுதாக்கலுக்கு பின் ராஜாமான்சிங் நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க., வில் தலித் மக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. மாவட்டம், ஒன்றிய பொறுப்புகள் வழங்கவில்லை. புவனகிரியில் ஜெ., போட்டியிட வேண்டி மனு தாக்கல் செய்திருந்தோம். நான் காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் போட்டியிட கட்சி தலைமையில் விருப்ப மனு கொடுத்தேன். ஆனால், நேர்காணலுக்கு அழைக்கவில்லை. புவனகிரியில் மீண்டும் செல்வி ராமஜெயம் போட்டியிடுவதால், அவரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுகிறேன். அ.தி.மு.க., வேட்பாளரை மாற்றினால் நான் விலகிக் கொள்வேன். இவ்வாறு ராஜாமான்சிங் கூறினார்.
 
 
source: dinamalar

No comments:

Post a Comment