Islamic Widget

January 11, 2011

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 161/2 லட்சம் வாக்காளர்கள்இறுதி பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்

கடலூர் மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் சீத்தாராமன் நேற்று வெளியிட்டார். இதில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 161/2 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல்

கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி(தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில்(தனி) ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்காக கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் விண்ணப்பித்துள்ள 56 ஆயிரத்து 534 பேரில் 49 ஆயிரத்து 976 விண்ணப்பங்கள் தகுதியானவைகள் என கண்டறியப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

கலெக்டர் வெளியிட்டார்

இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் சீத்தாராமன் நேற்று வெளியிட்டார். அப்போது தேர்தல் பிரிவு தாசில்தார் பிரபாகரன், செய்திமக்கள் தொடர்பு அதிகாரி முத்தையா, தேர்தல் பிரிவு ஊழியர் ராஜவேல், கணினிபிரிவு சாந்தப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் 16 லட்சத்து 45 ஆயிரத்து 134 வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர். இவர்களில் 8 லட்சத்து 36 ஆயிரத்து 633 பேர் ஆண் வாக்காளர்கள், 8 லட்சத்து 8 ஆயிரத்து 501 பேர் பெண் வாக்காளர்கள் ஆவார்கள். சட்டமன்ற தொகுதிவாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு;-

திட்டக்குடி தொகுதி

திட்டக்குடி(தனி) தொகுதியில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 607 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 87 ஆயிரத்து 542 பேர், பெண்கள் 86 ஆயிரத்து 65 பேர் உள்ளனர்.

விருத்தாசலம் தொகுதியில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 120 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 98 ஆயிரத்து 630 பேர் ஆண்கள், 94 ஆயிரத்து 490 பேர் பெண்கள்.

நெய்வேலி தொகுதியில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 807 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 83 ஆயிரத்து 277 பேர் ஆண்கள், 78 ஆயிரத்து 530 பேர் பெண்கள்.

பண்ருட்டி தொகுதியில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 368 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 95 ஆயிரத்து 37 பேர் ஆண்கள், 94 ஆயிரத்து 331 பேர் பெண்கள்.

கடலூர் தொகுதி

கடலூர் தொகுதியில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 366 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 88 ஆயிரத்து 650 பேர் ஆண்கள், 88 ஆயிரத்து 716 பேர் பெண்கள்.

குறிஞ்சிப்பாடி தொகுதியில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 350 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 91 ஆயிரத்து 543 பேர் ஆண்கள், 86 ஆயிரத்து 807 பேர் பெண்கள்.

புவனகிரி தொகுதியில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 264 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 753 பேர் ஆண்கள், ஒரு லட்சத்து 511 பேர் பெண்கள்.

சிதம்பரம் தொகுதியில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 619 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 94 ஆயிரத்து 192 பேர் ஆண்கள், 92 ஆயிரத்து 427 பேர் பெண்கள்.

காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 633 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 93 ஆயிரத்து 9 பேர் ஆண்கள், 86 ஆயிரத்து 624 பேர் பெண்கள்.

சரிபார்க்கவும்

இந்த இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், நகராட்சி ஆணையர் அலுவலகங்களிலும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. எனவே வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளதா? என்பதை சரிபார்த்துக்கொள்ளுமாறு கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment