Islamic Widget

December 08, 2010

மக்காவிலிருந்து கொண்டே அடிக்கடி உம்ரா செய்யலாமா?

கே.ஊரிலிந்து வந்த நாங்கள் பெற்றோர், உறவினருக்கு உம்ரா செய்ய ஒரு பட்டியலே (லிஸ்டே) வைத்திருக்கிறோம்.ஊரிலுள்ள உலமாக்கள் இதை ஊக்குவிக்கிறார்கள்.இப்படி மக்காவிலிருந்து கொண்டே தன்யீம் (மஸ்ஜிது ஆயிஷா) சென்று உம்ரா செய்யலாமா? சோட்டா உம்ரா,படா உம்ரா என்று கூறி தன்யீம் அல்லது ஜிஃரானா இடங்களுக்குச் சென்று இஹ்ராம் கட்டிவருகிறார்களே! இவை சரிதானா? ஆயிஷா-யான்பு


ப. இதற்கு நபி வழியில் எந்த ஆதாரமும் இல்லை. நபி(ஸல்) அவர்களோ, அவர்களின் நல்லறத் தோழர்களோ, அவர்களுக்குப்பின்னர் வந்த இமாம்களோ இவ்வாறு செய்தார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை.
அன்னை ஆயிஷா(ரலி)அவர்களுக்கு ஹஜ்ஜுக்கு வந்தவேளை மாதவிலக்கு ஏறபட்டது.அப்போது மிகவும் கவலையடந்தவர்களாக இது பற்றி நபிகளாரிடம் கூறியபோது, நபி(ஸல்) அவர்கள், ‘தவாபையும்,தொழுகையையும் தவிர அனைத்து ஹஜ்ஜு வழிபாடுகளையும் செய்வதற்கு அனுமதியளித்தார்கள்.
மாதவிலக்கு முடிந்து தூய்மையான பிறகு ஆயிஷா(ரலி) அவர்கள், நபிகளாரிடம் தெரிவித்தார்கள். அதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள் தமக்கு மிகவும் பிரியமான தமது மனைவியை அழைத்துக் கொண்டு அவர்களுடன் ஒரு உம்ரா செய்வதற்கு முன்வர வில்லை.
அப்போது, அவர்களின் சொந்த சகோதரர் அப்துர் ரஹ்மான் இப்னு அபீபக்ர்(ரலி) அவாகளை அழைத்துக் கொண்டு உம்ராவை நிறைவேற்றுமாறு கூறினார்கள்.
அதன் படி தமது சகோதரரை அழைத்துக் கொண்டு அவர்கள் மட்டும் உம்ராவை நிறைவேற்றினார்கள். அவர்களுடன் துணையாகச் சென்ற அப்துர்ரஹமான் (ரலி) அவர்கள் உம்ரா செய்யவே இல்லை.
மக்காவிலிருந்து கொண்டே உம்ரா செய்வதற்கு மார்க்கம் அனுமதித்திருந்தால் நபி(ஸல்) அவர்களே முன்வந்து தமக்கு மிகவும் பிரியமான ஆயிஷா(ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு சென்றி ருப்பார்கள்.
இதிலிருந்து மக்காவிலிருந்து கொண்டே ஆண்க ளாயினும் பெணகளாயினும், உம்ரா செய்வதற்கு அனுமதியே இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். மாதவிலக்கான பெண்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல, இவ்வாறு அடிக்கடி உம்ரா செய்து களைத்துப் போன ஹாஜிகள் ஓரிலட்சம் நன்மைகள் கிடைக்கும் பர்ளான தொழுகைகளுக்கு வரமுடியாது அறைகளிலே தங்கிவிட்டு நன்மைகளை கோட்டை விட்டுவிடுகிறார்கள.

பழமையான கஃபா இறையில்லத்தை அவர்கள் தவாபு செய்து கொண்டே இருக்கட்டும் ( 22:29) என்ற இறைவனின் ஆணைப்படி அதிகமதிகமாக தவாபு செய்வதையே மார்க்கம் ஊக்குவிக்கிறது. உம்ராவை யல்ல என்பதை ஒவ்வொரு ஹாஜிகளும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
சோட்டா உம்ரா, படா உம்ரா என்பதெல்லாம் கிடையாது.இவையெல்லாம் மக்களால் உருவாக்கிக் கொண்ட பித்அத்தான செயல்கள். இவற்றிற் கெல்லாம் மார்க்கத்தில் எவ்வித அங்கீகாரமும் கிடையாது.

தொடரும்…

No comments:

Post a Comment