Islamic Widget

September 12, 2010

புகை பழக்கத்தில் இருந்து மீள மூலிகை சிகரெட் தயாரிப்பு

புகை பழக்கத்தில் இருந்து மீள மூலிகை சிகரெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புகை பிடிப்ப வர்களை அப்பழக்கத்தில் இருந்து மீட்பதற்காக புதிய வகை மூலிகை சிகரெட் தயாரிக்கப்பட்டுள்ளது. மூலி கைகளால் ஆன இந்த சிகரெட்டை பிடிப்பவர்கள் நாள் செல்ல செல்ல புகை பிடிக்கும் பழக்கத்தை கை விட முடியும்.

இந்த சிகரெட்டை கோவை பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். மேலும், இவர் அங்குள்ள ரேஸ் கோர்ஸ் பகுதியில் “சாப்ட்ஸ்கில்ஸ்” பயிற்சி நிறு வனமும் நடத்தி வருகிறார்.
இவர் 3 விதமான மூலிகை சிகரெட்டுகளை தயாரித்துள்ளார். அதற்கு “ஹோப்” (ஹெர்பல் ஆலியோ பப் எனர்ஜிசர்) என பெயரிட்டுள்ளார். ஒருவகை சிகரெட் முழுவதும் மூலிகைகளால் ஆனவை. 2-வது வகை “கிங் சைஷ்” (மிகப்பெரிய அளவி லானது) வகையானது.
மற்றொன்று சாதாரண அளவு கொண்டது. இவை இரண்டிலும் குறைந்த அளவு புகையிலை சேர்க்கப்பட்டுள் ளது. இவற்றை உடனடியாக சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாதவர்கள் பயன்படுத்த வழங்கப்படுகிறது.

இந்த சிகரெட் குறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
புகை பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்கவே இந்த சிகரெட் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். மஞ்சள், மிளகு, இஞ்சி உள்ளிட்ட 12 மூலிகை பொருட்கள் மூலம் இது தயாரிக்கப்பட்டுள்ளது. 3 விதமான சிகரெட் தயாரித்து இருக்கிறேன். அவற்றை பிடிப்பவர்கள் மெல்ல மெல்ல சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விடுவார்கள். நிகோடின் என்ற நச்சுப்பொருள் அடிமை தனத்தில் இருந்து மீண்டு விடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இவற்றை அவர் பாப்ப நாயக்கன் பாளையத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து தயாரித்து வருகிறார். சாதாரண சிகரெட் விலைக்கே இது விற்கப்படுகிறது. அதற்கான காப்புரிமையை பெறும் நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

No comments:

Post a Comment