Islamic Widget

July 30, 2010

TNTJ மர்கஸ் திறப்பு விழா



பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸ் எனப்படும் இஸ்லாமிய சேவை மையம் இணைந்த பள்ளிவாசல் இன்று வெள்ளிக் கிழமை ஜூம்ஆ உரையுடன் துவங்கியது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பி. ஜெய்னுல்லாபுதீனின் வெள்ளி மேடையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்தும் மக்கள் பலர் திரளாக வருகை புரிந்தனர். பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதல் தளத்தில் பெண்களும் பலர் கலந்துக் கொண்டனர். கூட்டமிகுதியால் நிறைய பேர் தொழுவதற்கு சிரமப்பட்டனர். இதனால் பாதைகளிலும் மக்கள் தொழுதார்கள்.

நன்றி mypno

1 comment: