Islamic Widget

December 23, 2014

பரங்கிப்பேட்டை'மின்வாாிய அலுவலகம் முக்கிய அறிவிப்பு

பரங்கிப்பேட்டை'மின்வாாிய அலுவலகம் முக்கிய அறிவிப்பு


இறப்புச்செய்தி

கலிமா நகரில் மர்ஹூம் பாட்ச்சாபாய் அவர்களின் மகனா௫ம், ஜனாப் செய்யது அஹமது கபீா், தா்வீஸ் மொய்தின், அவர்களின் தகப்பானாரும்ாகிய ஜனாப் பசி௫தின் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.

February 12, 2014

எரிவாயு விலையை நிர்ணயிப்பதில் முறைகேடு


gas-fuel-poverty-4_1002893cபுதுடெல்லி:எரிவாயு விலையை முறைகேடாக நிர்ணயித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, முன்னாள் அமைச்சர் முரளி தேவ்ரா, ரிலையன்ஸ் இண்டஸ்டஸ்டிரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யும்படி தில்லி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.

மசூதியில் காவல்துறை தாக்குதல்: இருவர் பலி!

நெய்ரோபி: மசூதி மீது காவல்துறை தாக்குதல்: இருவர் பலி!கென்யாவிலுள்ள மஸ்ஜிதுல் மூசா என்ற முஸ்லிம்களின் முக்கிய மசூதியில் காவல்துறை நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். பலருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கென்யா நாட்டில் தீவிர போக்கு கொண்ட கிறிஸ்தவ பிரிவினரின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு முஸ்லிம்கள் மிகச் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். அங்குள்ள போர்ட் சிட்டி என்ற இடத்தில் மஸ்ஜிதுல் மூசா என்ற பெயரிலான மசூதி ஒன்று உள்ளது. இப்பகுதியிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் இங்கு ஒன்று கூடி பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம்.

August 06, 2013

பெருநாள் தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இந்த வருடத்தின் நோன்புப் பெருநாள் தொழுகை இன்ஷா அல்லாஹ் நபி வழியை பேணி சுன்னத்தான முறையில் நடைப்பெற உள்ளது இடம்: வத்தியாபள்ளிதிடல்.


February 05, 2013

புதுப்பள்ளி


புதுபள்ளியின் புதிய  கட்டுமானப்பணிகளுக்கான பணிகள் ஆரம்பிக்கபட்டது, இன்நிலையில் நேற்று பழைய பள்ளியை இடித்து தரைமட்டமாக ஆக்கப்பட்டது.

 

January 30, 2013

முஸ்லிம்களின் உணர்வுகள் குறித்து கவலையில்லை! விஸ்வரூபத்திற்கு தடை நீக்கம் – சென்னை உயர்நீதிமன்றத்தின் பாரபட்சமான தீர்ப்பு!


vishwaroopamசென்னை:திருக்குர்ஆனையும், தொழுகை உள்ளிட்ட முஸ்லிம்களின் வழிபாட்டையும் இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கான தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.
தமிழ் இன உணர்வுக்காக டேம் 999 என்ற திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதி மறுத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் முஸ்லிம்களின் உணர்வுகள் குறித்து கவலைப்படாமல் சென்னை உயர்நீதிமன்றம் விஸ்வரூபம் படத்திற்கான தடையை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

January 29, 2013

இறப்புச் செய்தி

நல்லம் பிள்ளை தெருவில் மா்ஹும் செய்யது பீா் என்கிற ஜானி பாய், அவா்களின் மகனும் செய்யது பாபு, செய்யது முஸ்தபா, (மா்ஹும் செய்யது அகமது என்கிற (பொத்தி), செய்யது இமாம், இவா்களின் சகோதரருமாகிய செய்யது கலாம் அவர்கள் மர்ஹூமாகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 10.மணிக்கு நல்லடக்கம்  மீராப்பள்ளியில்.

January 18, 2013

ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் முகாம்களை கண்டுபிடிக்க காடுகளில் என்.ஐ.ஏ தேடுதல் வேட்டை!


NIA team scans Dewas forests for saffron hideoutsபுதுடெல்லி:ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் ரகசிய முகாம்களை கண்டுபிடிக்க மத்தியபிரதேச மாநிலத்தின் தேவாஸில் உள்ள காட்டுப்பகுதிகளில் தேசிய புலனாய்வு ஏஜன்சி தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெடிக்குண்டு தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பு இங்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் சோதனை நடத்தியிருந்தனர். இதுத்தொடர்பான ஆதாரங்கள் மற்றும் ரகசிய முகாம்களை கண்டுபிடிக்க என்.ஐ.ஏ சோதனை நடத்திவருகிறது.

January 16, 2013

ஜனவரி 20 மற்றும் பிப்ரவரி 24ம் தேதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம்

கடலூர்:போலியோ சொட்டு மருந்து முகாமிற்கான அனைத்துத் துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.நாடு முழுவதும் வரும் ஜனவரி 20 மற்றும் பிப்ரவரி 24ம் தேதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. அந்த பணியை கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக செய்திடும் பொருட்டு அனைத்துத் துறை அலுவலர்களின் ஒருங்கிணைப் புக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது.